இலங்கை

மூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் துறைமுக தொழிற்சங்கத்திற்கு இடையில் இன்று (03) காலை தங்காலை கால்டன் வீட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில்  இறக்குவதற்கு மாத்திரம் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

துறைமுக தொழிற்சங்கம் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் இணக்கம் வௌியிட்டுள்ளனர்.