Breaking News

மூன்று நாட்களுக்கு மூடப்படும் பேலியகொடை மீன் சந்தை !

பேலியகொடை மீன் சந்தை நாளை (22) முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட உள்ளது என்று மீன் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தை வளாகத்திற்குள் கோவிட் -19 பரவுவதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தொழிற்சங்கம் கூறுகிறது.

கொவிட் -19 நோயாளியாக அடையாளம் காணப்பட்ட பிலியந்தலையை சேர்ந்த மீன் விற்பனையாளர் ஒருவர் பேலியகொடை மீன் சந்தைக்கு நேற்று வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டது.

பேலியகொடை மீன் சந்தையில் 154 கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் நாளை பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று
தெரிவிக்கப்பட்டது