விளையாட்டு

மூன்றாவது போட்டியில் இலங்கை தோல்வி; தொடர் அவுஸ்திரேலியா வசம்அவுஸ்ரேலிய மகளிர் அணிக்கு எதிரான, மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியிலும் இலங்கை மகளிர் அணி தோல்வியடைந்து தொடரை மூன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் இழந்துள்ளது.

அவுஸ்ரேலியாவpற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணி  மூன்று போட்டிகள் கொண்டஇ இருபதுக்கு-20 தொடர் மற்றும் மூன்று போட்டிகளை உள்ளடக்கிய, ஒருநாள் சர்வதேச தொடரில் பங்கேற்றது.

ஏற்கனவேஇ இருபதுக்கு-20 தொடரை 3 – 0 என்ற நிலையில் இழந்த,  இலங்கைஇ ஒருநாள் தொடரையும் 3 – 0 என்ற அடிப்படையில் இழந்துள்ளது.

போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

ஆரம்பத்துடுப்பாட்ட வீராங்கனையாக களமிறங்கிய, சாமரி அத்தப்பத்து நிதானமாக விளையாடி 14 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்களாக, 103 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இது சாமரியின் ஐந்தாவத ஒருநாள் சதமாக அமைந்தது.

196 என்ற இலகுவான ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய, அவுஸ்ரேலிய மகளிர் அணி, 26.5 ஓவர்களில் இலக்கை அடைந்தது.

ஹீலி ஆட்டமிழக்காது 112 ஓட்டங்களையும்,ஹைனெஸ் 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்த வெற்றி மூலம் இலங்கைக்கு எதிரான தொடரையும் 3 – 0 என்ற கணக்கில் அவுஸ்ரேலிய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.