விளையாட்டு

மூன்றாம் நாள் இன்று; 316 ஓட்டங்கள் பின்னிலையில் இலங்கை


இலங்கை சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 42 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி,358  ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

சிம்பாவ்பே அணியின் துடுப்பாட்டத்தில், எர்வின் கிரெய்க் 85 ஓட்டங்களையும், கெவின் கசுசா 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் மிகச்சிறப்பாக பந்துவீசிய லசித் எம்புல்தெனிய 5 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

நேற்றைய தினம், தேநீர் இடைவேளைக்கு பின்னர் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி ஆட்ட நேர நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 42 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்ட நேர நிறைவுக்கு முன்னதாகவே போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.