இலங்கை

மூன்றரை மணிநேர விசாரணையின் பின்னர் வெளியேறினார் தயாசிறி

குளியாப்பிட்டியவில் வன்முறையில் ஈடுபட்டமைக்காக கைதானவர்களை வெறொரு பொலிஸ்நிலையத்தில் முன்னிறுத்தி பிணைப் பெற்றுக் கொடுத்ததாக சிறிலங்கா சுதந்திர கட்சி பொதுசெயலாளர் தயாசிறி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதுதொடர்பான காணொளிகளும் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து இன்று கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் தயாசிறி ஜெயசேகர காலை 9.30ல் இருந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

மூன்றரை மணிநேர விசாரணையின் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியதாக எமது செய்தியாளர் கூறினார்.