இலங்கை

முஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டம் !

 

முஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு ,பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கொழும்பு புதுக்கடையிலுள்ள நீதியமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

ஏப்ரல் 21 தாக்குதல் சூத்திரதாரியை வெளிப்படுத்த வேண்டும், குருநாகல் வைத்தியர் ஷாபியை உடனே விடுதலை செய்ய வேண்டும், முஸ்லிம் பெண்களின் ஆடை கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும், ஞானசார தேரரின் பொதுமன்னிப்பு இரத்து செய்யப்பட வேண்டும், கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.