இலங்கை

முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் பதவியேற்பா? அடியோடு நிராகரித்தார் ஹாரிஸ் எம் பி !

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏற்கனவே இராஜினாமா செய்த பதவிகளை மீண்டும் பொறுப்பேற்கவுள்ளதாக வந்த செய்திகளை திட்டவட்டமாக நிராகரித்தார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் ஹாரிஸ்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஹலீம் எம்பி அமைச்சுப் பதவிகளை ஏற்பது சம்பந்தமாக வரும் 18 ஆம் திகதி நடத்தப்படும் கூட்டத்தில் ஆராயப்படுமென கூறியிருந்தார். அதேசமயம் இராஜினாமா செய்தவர்கள் அடுத்தவாரம் பதவியேற்பார்கள் என்றும் செய்திகள் வெளிவந்திருந்தன . இந்நிலையில் அது தொடர்பில் கேட்டபோதே ஹாரிஸ் எம் பி மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் கூறியதாவது,

மீண்டும் பதவிகளை நாங்கள் ஏற்பது என்ற பேச்சுக்கு இப்போதைக்கு இடமில்லை. சமூகம் மீதான நெருக்கடிகள் குறைந்தபாடில்லை. எனவே அவற்றை பார்க்காமல் அமைச்சுப் பதவிகளை மீண்டும் பெறுவதை பற்றி நாங்கள் யோசிக்கவில்லை.ஹலீம் எம் பி சொல்லும் கூட்டம் எங்கு நடக்கும் என்பது பற்றி தெரியவில்லை.என்னைப் பொறுத்தவரை அமைச்சுப் பதவிகளை இப்போது பெறுவதை விட எமது மக்கள் மீதான அடக்குமுறை குறித்து சிந்தித்து அவற்றை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். யாருக்கு எப்படியோ எனக்கு பதவி முக்கியமல்ல. என் சமூகமே எனக்கு முக்கியம். நான் சமூகத்துடன் இருக்க விரும்புகிறேன்..”

என்றார் ஹாரிஸ்