இலங்கை

முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் குறித்து இந்தியா கரிசனை – கொழும்பில் பேசுவார் மோடி !

 

இலங்கையில் முஸ்லிம் மற்றும் பௌத்த சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமை குறித்து இந்திய மத்திய அரசாங்கம் மிகுந்த கரிசனை கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இலங்கையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்றாக பதவி விலகிய விடயம், தென்னிந்தியாவின் பாதுகாப்பு விடயத்தில் கேள்வியை ஏற்படுத்தி இருப்பதாக இந்தியா கருதுகிறது.

இந்த நிலையில், வரும் ஞாயிறு இலங்கை வருகின்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்த விடயம் குறித்து இலங்கை அரச தலைவருக்கு அழுத்தம் கொடுக்கவிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.