இலங்கை

முஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு !

 

வென்னப்புவ முஸ்லிம்களின் வியாபாரம் இடைநிறுத்த வேண்டுமென வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் விடுத்துள்ள உத்தரவு விடயத்தினை பொலிஸார் மாரவில மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து பிரதேச சபைத் தலைவரை வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கான விளக்கத்தை அவர் நீதிமன்றில் அளிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.