இலங்கை

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் தைப்பொங்கல் நிகழ்வு!

 

-வன்னி செய்தியாளர் –

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் நிகழ்வுகள் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் நேற்று இடம்பெற்றது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெயந்த செனவிரத்ன வின் தலைமையில் இந்த பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன . அத்தோடு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த ஆண்டு சாந்தியும் சமாதானமும் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் மற்றும் அவுஸ்திரேலியாவின் காட்டுத்தீயால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து விரைவில் அந்த நாடு முன்னேற வேண்டும் எனவும் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகள் 64 ஆவது படைப்பிரிவின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா உள்ளிட்ட ஏனைய படை அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் பாதுகாப்பு படையினரால் மக்களுக்கு பொங்கல் சிற்றுண்டிகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.