இலங்கை

முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தீயில் எரிந்து தற்கொலை!

 

– வன்னி செய்தியாளர் –

முல்லைத்தீவு தீர்த்தக்கரைப் பகுதியில் குடும்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக மனைவியுடன் பேசிவிட்டு தனது தலையில் பெற்றோலினை ஊற்றி பகிடிக்காக தற்கொலைக்கு முயன்ற வேளை அது விபரீதமாகி இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

தீர்த்தக்கரையினை சேர்ந்த 34 அகவையுடைய இராசதுரை யோகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.நேற்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது எரிகாயங்களுக்கு உள்ளான குறித்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவேளை இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இவரது உயிரிழப்பு தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.