இலங்கை

முல்லைத்தீவு சுதந்திரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல்!

-வன்னி செய்தியாளர் –

முல்லைததீவு சுதந்திரபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(10) இடம்பெற்றது.

கடந்த 1998ஆம் ஆண்டு இதே நாள் இலங்கை விமானபடையாலும் ,இராணுவத்தினாலும் விமானத்தாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதலில் 33 சிறுவர்கள் ,மாணவர்கள் ,பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வன்னி குரோஸ் நினைவேந்தல் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்த படுகொலை நினைவேந்தலின் பொதுச் சுடரினை படுகொலை தாக்குதலில் தமது குடும்பத்தில் 4பேரை இழந்த தயார் மற்றும் தந்தையார் ஏற்றிவைத்தார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆண்டியையா புவனேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் பிரேமகாந் ஏனைய பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலிகளை செலுத்தினர்