Breaking News

முல்லைத்தீவு கற்சிலைமடுவில் விபத்து !

 

– வன்னி செய்தியாளர் –

முல்லைத்தீவு , கற்சிலைமடு பகுதியில் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

மாட்டு எரு ஏற்றிசென்ற பாரவூர்தி ஒன்றே வேக கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வளவு ஒன்றில் தடம்புரண்டுள்ளது.

இந்த விபத்தில் இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருக்கின்றனர்.