இலங்கை

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் விவசாய கிணற்றில் வீழ்ந்து காட்டு யானை உயிரிழப்பு!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட சம்மளங்குளம் பகுதியில் விவசாய காணியில் காட்டுயானை ஒன்று விழுந்து உயிரிழந்துள்ளது.

விவசாயிகள் விவசாயம் செய்யும் விசாய கிணற்றில் கடந்த ஜந்து நாட்களுக்கு முன்னர் குறித்த யானை விழுந்துள்ளதாகவும் இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறையிட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

சம்மளங்குளம் கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக தண்ணீருக்காக யானை அலைத்து கிணற்றில் வீழ்ந்துள்ளதாக கிராம வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.

அருகில் பனைமரம் காணப்படுவதால் பனம் பழம் விழுகின்றது. இதனை உண்பதற்காக வந்து பனம் பழத்தினை யானை உண்டுள்ளது. அதில் இலத்தி போட்டுள்ளது அதன் பின்னர் கட்டு கிணறின் ஒருபகுதி உடைந்து காணப்படுகின்றது. இதன் வழியாக உள்ளே விழுந்துள்ளது. இதனை இரண்டு நாட்களின் பின்னரே கிராம மக்கள் கண்டுள்ளதாகவும் தெரிவித்த கிராம வாசிகள் குறித்த கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த யானையினை வெளியே எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

– vanni reporter –