விளையாட்டு

முறைகேடான பந்துகளை கண்காணிக்க சிறப்பு நடுவர்


அடுத்த வருடம் இடம்பெறவுள்ள, இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் முறைகேடான பந்துகளை (No Ball) கண்காணிக்க சிறப்பு தொலைக்காட்சி நடுவர் ஒருவரை நியமிக்க ஐ.பி.எல் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், ஆட்டமிழப்புகளை வழங்கும் தொலைக்காட்சி நடுவருக்கு மேலதிகமாக, முறைகேடான பந்துகள் உள்ளிட்ட, தீர்ப்புகளை மேன்முறையீடு செய்யும் தொலைக்காட்சி நடுவர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளில் முறைகேடான பந்துகளை கணிப்பதில் நடுவர்களின் செயற்பாடுகள் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன.

குறிப்பாக, கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில், ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணியின், லசித் மாலிங்க வீசிய முறைகேடான பந்து நடுவரால் சரியான அவதானத்திற்கு உட்படவில்லை.

இது பெரிய சர்ச்சைக்குள்ளானது. கோஹ்லி இதனை ‘முட்டாள்தனமானது‘ என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இவ்வாறான தவறுகள், 2020 ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இடம்பெறுவதை தடுக்கும் வகையில், தொலைக்காட்சி நடுவர் ஒருவர் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.