விளையாட்டு

முன்னேற முயலும் தென்னாப்பிரிக்கா, காயங்களுடன் பங்களாதேஸ் – இன்று மோதல்

 

பங்களாதேஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இது பயங்களாதேஸுக்கு இந்த தொடரின் முதலாவது போட்டியாகவும், தென்னாப்பிரிக்காவுக்கு இரண்டாவது போட்டியாகவும் அமையவுள்ளது.

முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா இங்கிலாந்திடம் தோற்றிருந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிபெறவேண்டியது கட்டாயமாக பார்க்கப்படும்.

தென்னாப்பிரிக்காவின் துடுப்பாட்ட வீரர் ஹசீம் அம்லா கடந்த போட்டியில் காயமடைந்தநிலையில், அவர் இன்று விளையாடுவதில் நிச்சமயற்றநிலைமை உள்ளது.

பங்களாதேஸ் அணியின் பல வீரர்கள் காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிம் இக்பால், மஸ்ரஃபே மோட்டாசா, முஸ்தாஃபிசர், சாய்பிதீன் ஆகியோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனினும் 100 சதவீதம் உடற்தகுதி இல்லாத போதும், சிலவீரர்கள் இன்று களமிறக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.