விளையாட்டு

முன்னிலைப் பெற்றது நியுசிலாந்துநெல்சனில் இடம்பெற்ற மூன்றாவது இருபதுக்கு-20 போட்டியில் 14 ஓட்டங்கங்களால் வெற்றிபெற்ற, நியுசிலாந்து அணி, இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு-20 தொடரில் 2-1 என்ற  அடிப்படையில் முன்னிலைப் பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி, 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது.

அணியின் துடுப்பாட்டத்தில், கொலின் டி கிரன்ட்ஹோம் 55 ஓட்டங்களையும், மார்டின் கப்டில் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் டொம் குரன் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்;த்தினார்.

181 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலளித்து ஆடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை தழுவியது.

இங்கிலாந்து அணி சார்பாக, டேவிட் மாலன் 55 ஓட்டங்களையும் ஜேம்ஸ் வின்ஸ் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

லொக்கி பர்கசன் மற்றும் பிளையர் டிக்னர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் நான்காவது போட்டி எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெறவுள்ளது.