விளையாட்டு

முன்னாள் கார்ப்பந்தய சம்பியன் காலமானார்

 

அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஃபோர்மியுலா 1 காரோட்ட வீரர் நிக்கி லோடா தமது 70வது வயதில் உயிரிழந்தார்.

1975 மற்றும் 1977 ஆகிய ஆண்டுகளில் ஃபெராரிக்காகவும், 1984ம் ஆண்டு மெக்லாரனுக்காகவும் அவர் சாம்பியன் பட்டம் வென்றார்.

1976ம் ஆண்டு ஜேர்மன் க்ராண் ப்ரீயில் இடம்பெற்ற விபத்தில் பெரும் காயத்துக்கு உள்ளானஅவர், அதில் இருந்து மீண்டு, 1977ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றமை, இப்போதும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.

9 மாதங்களுக்கு முன்னர் அவருக்கு நுரையீரல் மாற்றுசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இன்று உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் அறிவித்துள்ளனர்.