Breaking News

முன்னாள் எம் பி தங்கேஸ்வரி காலமானார் !

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம் பி தங்கேஸ்வரி கதிர்காமன் காலமானார்.

நீண்டகாலம் சுகயீனமுற்ற நிலையில் இருந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.

முக்கியமான காலகட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட அவர் பெண்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த ஒருவராவார்.

– கனகராசா சரவணன் –