இலங்கை

முன்னறிவிப்பின்றி ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதியின் புதுவருட நிகழ்வு !

 

இன்று காலை ஜனாதிபதி வாசஸ்தலத்தில் நடைபெறவிருந்த புதுவருட நிகழ்வுகள் இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டன .

காலை பதினொரு மணிக்கு ஜனாதிபதி இல்லத்தில் புதுவருட நிகழ்வுகள் நடைபெறுமென சொல்லப்பட்டதால் முக்கிய அரசியல்வாதிகள் பலர் சென்றிருந்தனர்.ஆனால் அங்கு எந்த ஏற்பாடுகளும் நடந்ததாக தெரியவில்லை.

பின்னர் அங்கு விசாரித்தபோது நிகழ்வு பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இதுபற்றி எந்த முன்னறிவிப்பும் செய்யாததால் விசனமுற்ற நிலையில் மீண்டும் அந்த அரசியல் பிரமுகர்கள் திரும்பிச் சென்றதாக சொல்லப்பட்டது.