இலங்கை

“முதுகெலும்பில்லாத தலைவர்கள் – அரசு வீட்டுக்கு செல்ல வேண்டும்” – பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை !

 

“முடிவுகளை எடுக்க முடியாத முதுகெலும்பற்ற தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பை செய்யக் கூடியவர்களிடம் கையளித்துவிட்டு வீடு செல்ல வேண்டும்.”

இவ்வாறு நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயத்தில் இன்று நடைபெற்ற ஆராதனையின் பின்னர் ஆற்றிய உரையில் கூறினார் பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை. அவர் மேலும் கூறியதாவது ,

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முஸ்லிம் மக்கள் பொறுப்புக் கூறத் தேவையில்லை.அது அரசின் பொறுப்பற்ற தன்மையால் நடந்தது. உலக நாடுகளின் இருப்புக்காக அவர்களின் சதிகளில் எமது நாடு சிக்கிக் கொண்டது.

புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஆதாரங்கள் இருந்தும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முடியாமற் போனது.முதுகெலும்பில்லாத தலைவர்கள் இருப்பதே இதற்கு காரணம் .

வழி தவறிய இளைஞர்களை பிடித்துக் கொண்டு சர்வதேச நாடுகள் சில தமது நோக்கை அடைய செய்த சதியின் விளைவே தாக்குதல்.வெளிநாட்டு சக்திகள் இங்கு தலைதூக்க இடமளிக்க முடியாது. நாட்டின் புலனாய்வுத்துறையை அந்த சக்திகளின் சொல்கேட்டே அரசு முடக்கியது. – என்றார் பேராயர்