விளையாட்டு

முதல் வெற்றியை பதிவு செய்தது பங்களாதேஸ்

 

 

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான உலகக்கிண்ண போட்டியில் பங்களாதேஸ் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 50 ஓவர்களில் 330 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்து துடுப்பாடிய தென்னாப்பிரிக்கா 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 309 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி கண்டது.

இதன்படி தென்னாப்பிரிக்கா இந்த தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை கண்டுள்ளது.

பங்களாதேஸ் இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ளது.