விளையாட்டு

முதலாவது T20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி

நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நியூசிலாந்து அணி 53 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

நியூசிலாந்து அணி சார்பாக டேவன் கொன்வே 99 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில் 185 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 17.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அதன்படி, 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் 5க்கு 1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.