இலங்கை

முதலாவது தேர்தல் முடிவுகளை மாலை 2 மணிக்கு வௌியிட முடியும் – மஹிந்த

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்  வாக்கெண்ணும் நடவடிக்கைகளை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதற்கமைய முதலாவது தேர்தல் முடிவுகளை மாலை 2 மணிக்கு வௌியிட முடியும் எனவும் தேசப்பிரிய கூறியுள்ளார்.

ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் மற்றும் செய்திப் பிரிவு பிரதானிகளுடன் இன்று (30) பிற்பகல் தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.