இலங்கை

முஜிபுர் வந்தால் வரமாட்டோம் – அடம்பிடித்த ஐ.தே. க அரசியல்வாதிகள் !

முஜிபுர் ரஹ்மான் எம் பி கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் கிறிஸ்தவ எம்.பிக்கள் புறக்கணித்துள்ள நிகழ்வு நடந்துள்ளது.
தற்போதைய நாட்டு நிலைமை தொடர்பில் அரசின் தேசிய தொலைக்காட்சியில் நேற்றிரவு நிகழ்ச்சியொன்று ஒளிபரப்பானது.
அதில் கலந்து கொள்ள எம்.பிக்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் முஜிபுர் ரஹ்மான் எம்பி கலந்து கொள்வதை அறிந்த அமைச்சர் ஜோன் அமரதுங்க – காவிந்த ஜயவர்தன எம்பி ஆகியோர் தங்களால் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாதென அறிவித்துவிட்டதாக தெரிகிறது.
முஜிபுர் ரஹ்மான் கலந்து கொள்ளும் நிகழ்வில் சரிசமமாக உட்கார்ந்து தம்மால் கலந்துகொள்ளமுடியாதென காவிந்த எம்பி நேரடியாகவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்ததாக அறியமுடிந்தது.