இலங்கை

முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள் – அறிவுறுத்தியது சட்ட மா அதிபர் திணைக்களம் !

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் – பொறுப்பை தவறவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் பதில் பொலிஸ் மா அதிபரை கேட்டுள்ளது.

இதன்படி முன்னாள் பாதுகாப்பு செயலர் , பொலிஸ் மா அதிபர் பூஜித்த , அரச புலனாய்வுத் துறைத் தலைவர் , விசேட அதிரடிப்படை கட்டளைத் தளபதி , மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.