இலங்கை

முக்கிய செய்திக் குறிப்பு !

 

* மாளிகாவத்தை,கெத்தாராம விளையாட்டரங்கு அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து உரப்பையில் இடப்பட்ட நிலையில் வாள்கள் மற்றும் சில உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பல பொருட்கள் உள்ளனவா என்பதை அறிய தொடர்ந்து தேடுதல் நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

* கடற்படை தலைமை கட்டளையிடும் அதிகாரியாக ரியர் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்ன நியமனம்.

* பிபில வலயக் கல்விப்பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றிய முஸ்லிம் ஆசிரிய ஆலோசகரான ஒருவரின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.சில தினங்களுக்கு முன்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டு இன்று கடமைக்கு சமூகமளித்தார்.
ஆனால் அலுவலக ஊழியர்கள் அனைவரும் அவருடன் கடமையாற்ற முடியாதென வெளியில் வந்ததையடுத்து ஊவா மாகாண கல்வியமைச்சு அந்த ஆசிரிய ஆலோசகரின் சேவையை இடைநிறுத்தியது.

நீதிமன்ற விசாரணைகள் முடியும்வரை அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாரென சொல்லப்படுகிறது.வலயக் கல்விப் பணிமனை பாதுகாப்புத் தரப்பினரின் விசேட சோதனைக்கும் உட்படுத்தப்பட்டது.

* பேருவளையில் 20 வாள்களை பொலிஸார் மீட்டுள்ளனர். சிலர் பொலிசுக்கு வந்து வாள்களை ஒப்படைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

* வெல்லம்பிட்டி தொழிற்சாலை சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட போது தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விசேட விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தகவல்