இலங்கை

முக்கியமான செய்திகளின் சாராம்சம் !

 

* தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் உறுப்பினரான சந்தேகிக்கப்பட்டு நேற்று மருதானையில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவரின் அலுவலகத்தில் இருந்து 83 லட்ச ரூபா பணத்தை கொம்பனித்தெரு பொலிஸார் மீட்டுள்ளனர்.

* வெலிமடை ,போகஹகும்புரவில் மூன்று வாள்கள் மற்றும் சில உபகரணங்கள் மீட்பு

* தங்காலையில் இன்று நடத்தப்பட்ட தேடுதல்களில் வாள்கள் சில கைப்பற்றப்பட்டன. தொலைபேசியில் சில படங்களை வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார்

* சாய்ந்தமருது தற்கொலைதாரிகளால் புதைக்கப்பட்டதாக கருதப்படும் பல குண்டுகள் காத்தான்குடி கடற்கரையில் மீட்பு – பொலிஸ் பேச்சாளர்.

* சஹ்ரானின் மகளின் மரபணுவுடன் சஹ்ரானின் மரபணுவை சோதித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அரச பகுப்பாய்வாளருக்கு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டார். தாக்குதல் சம்பவத்தில் துண்டாக கிடந்த சஹ்ரானினது என்று சொல்லப்படும் தலைப்பகுதி இந்த மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

* காணியொன்றை பெற்றுத் தருவதாக கூறி ஐயாயிரம் ரூபாவை லஞ்சமாக பெற்ற மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமையாளர் ஒருவர் வவுனியாவில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

* வெல்லம்பிட்டியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது விசாரணை.