Breaking News

முகாம்களுக்குள் முடங்கும் படைகள் – ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்ப்பால் பணிந்தது அரசு !

 

வீதிச் சோதனை நடவடிக்கைகள் மற்றும் மேலதிக கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினரை முகாம்களுக்குள் முடக்க அரசு தீர்மானித்துள்ளது.

தேர்தல் பணிகளுக்கு தேவைப்பட்டால் மாத்திரமே முப்படையினர் பயன்படுத்தப்படவுள்ளனர்.

தேர்தல் காலத்தில் வீதிகளில் அநாவசிய சோதனைகளில் முப்படையினர் ஈடுபடுவதால் மக்கள் அச்சமுறும் நிலைமை ஏற்படுமென்பதால் படைகளை முகாம்களுக்குள் முடக்குமாறு இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் விடுத்த கோரிக்கையையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை மாலை முதல் சனிக்கிழமை மாலை வரை முப்படையினர் முகாம்களில் உஷார் நிலையில் வைக்கப்படுவார்களென்றும் தேவைப்படின் அவர்களின் உதவிகளை பொலிஸ் மா அதிபர் கோரலாமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை அரசு போக்குவரத்து சபைக்கு சொந்தமான 1500 பஸ்களை தேர்தல் கடமைகளுக்கு பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.தேவைப்படின் விமானப்படையின் உதவியை பெறவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தலை முன்னிட்டு நாளைய தினம் அனைத்து பாடசாலைகளும் மூடப்படுமென்பதும் குறிப்பிடத்தக்கது.