இலங்கை

மீண்டும் யாழ்ப்பாணத்திலிருந்து ஈழநாடு !

 

1959ல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து பின்னர் தடைப்பட்டுப்போன ஈழநாடு பத்திரிகை மீண்டும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரத் தொடங்கியிருக்கின்றது.

அதன் வெளியீட்டு வைபவம் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஈழநாடு ஸ்தாபக நிர்வாக இயக்குனர் டாக்டர் சண்முகரட்ணம் அவர்களின் புதல்வரும் தற்போதைய ஈழநாடு நிறுவன இயக்குனர்களில் ஒருவருமான ச.ரட்ணராஜனிடம் ஈழநாடு நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ்.குகநாதன் முதலாவது பிரதியைக் கையளித்தார்.

ஈழநாடு இயக்குனர் எஸ். மகாலிங்கசிவம், ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இந்த வெளியிட்டு வைபவத்தில் கலந்துகொண்டனர்.