விளையாட்டு

மீண்டும் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை நடத்த துடிக்கும் பாகிஸ்தான்

இலங்கை கிரிக்கட் அணி மீது 2009ம் ஆண்டு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, அங்கு சர்வதேச கிரிக்கட்டில் கலந்துக் கொள்ள அணிகள் தயங்குகின்றன.
இடையில் இலங்கை அணி சென்று 20க்கு20 கிரிக்கட் போட்டி ஒன்றில் விளையாடி இருந்தாலும் கூட, சர்வதேச அணிகள் பாதுகாப்பு காரணங்களால் அங்கு செல்ல மறுகின்றன.
இந்தநிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியை அழைத்து பாகிஸ்தானில் கிரிக்கட் தொடர் ஒன்றை நடத்துவதற்கான முயற்சிகளை அந்த நாட்டின் கிரிக்கட் சபை எடுத்துள்ளது.
இதற்காக புதிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.