இலங்கை

மீண்டும் கடமைகளை ஆரம்பித்தார் பவித்ரா !

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார அமைச்சில் இன்று மீண்டும் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்திருந்த நிலையில் கடந்த வாரம் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில், இன்று அவர் சுகாதார அமைச்சின் சில உயர் அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.