இலங்கை

“மீண்டும் அதிகார துஷ்பிரயோகம்” – மைத்ரியை கண்டித்தார் சுமந்திரன்

நீதிமன்றத்தை அவமதித்து சிறையில் இருந்த ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால, அரசியலமைப்பில் தனக்குள்ள அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் – ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.