உஷ்... இது இரகசியம் !

“மீடியா வேண்டாம் சாது” – கேட்டார் மலையக அரசியல்வாதி

 

மலையக அரசியல் கட்சியொன்றின் தலைவரும் அவரது சகாக்கள் சிலரும் நேற்று கண்டியில் மாநாயக்கரை சந்தித்தபோது அங்கு மீடியா ஆட்கள் நின்றனர்.

வழமையாக அங்கு தேரர்களை சந்திக்க வருவோர் நடத்தும் பேச்சுக்களை மீடியா ஆட்கள் விடியோ எடுப்பார்கள். ஆனால் அப்படி செய்யவேண்டாமென மலையக அரசியல்வாதி நேற்று தேரரிடம் கேட்டுக் கொண்டாராம். “ உங்களுக்கு தேவையில்லாவிட்டால் எமக்கும் தேவையில்லை” என்று மீடியா ஆட்களும் சென்று விட்டனர்.

தற்போதைய சூழ்நிலையில் இப்படியான சந்திப்புக்கள் குறித்து சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் உருவாகியுள்ளதால் நேற்றைய சந்திப்பிற்கு அழைத்த பலர் செல்லவில்லை.

ஏற்கனவே பேராயரை சந்தித்த போது பத்து லட்ச ரூபா நிதி வழங்க இந்த கட்சி தீர்மானித்திருந்தது.ஆனால் யாரும் ஒத்துழைக்காத காரணத்தினால் இறுதியில் 5 லட்ச ரூபாவே சேகரித்து வழங்கப்பட்டது.