Breaking News

மிருசுவில் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றவருக்கு பொதுமன்னிப்பு !

 

மிருசுவில் இராணுவ முகாமுக்கு அருகே தமிழர்கள் எட்டு பேரைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சிறப்புப் படைபிரிவின் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுவிக்கப்படுவார் என தகவல் வெளிவந்துள்ளது.

2000 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி, யாழ்ப்பாணம் மிருசுவில் இராணுவ முகாமுக்கு அருகே எட்டு தமிழர்களைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க உட்பட 14 சிப்பாய்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் சாவகச்சேரி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். முதல் எதிரியாக குற்றம் சாட்டப்பட்ட சுனில் ரத்நாயக்க கொழும்பு மேல் நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.ஏனையோர் விடுவிக்கப்பட்டனர்.

போர்க்காலத்தில் அவர் ஆற்றிய பணிகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அவருக்கு கிடைக்கவுள்ளதாக அறியமுடிகின்றது.