இலங்கை

மியான்மரில் கைது செய்யப்பட்ட இலங்கையர் !

 

அண்மைய இலங்கை தற்கொலை தாக்குதல்களில் தொடர்புகள் இருக்கலாமென சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் மியான்மரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்துல் ஸலாம் இர்ஷாத் மொஹம்மட் என்ற இவர் சுற்றுலா விசாவில் மியான்மர் சென்று மேலதிக காலம் அங்கு தங்கியிருந்தது ஏன் என்று பொலிஸ் விசாரணைகளை நடத்துகிறது.

இலங்கைக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.