உலகம்

மியன்மார் விவகாரத்தைக் கையாள இரண்டு சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது அமெரிக்கா

மியன்மார் அரசியல் நிலவரத்தை கண்காணிக்கவும் ஜனநாயகத்தை மீட்கவும் இரண்டு சிறப்பு அதிகாரிகளை அமெரிக்கா நியமித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்க்கென் பர்மா மக்களுடன் அமெரிக்கா தோள்கொடுத்து நிற்பதாக தெரிவித்தார்.

மக்களின் விருப்பத்துக்கு மாறாக அதிகாரத்தைக் கைப்பற்றி வன்முறையைத் தூண்டிவிடும் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்றும் பிளிங்க்கென் தெரிவித்துள்ளார்.