இலங்கை

மின்னல் தாக்கி யாழில் மூன்று பேர் உயிரிழப்பு – தோட்ட வேலையின்போது நடந்த சோகம் !

யாழ்ப்பாணம் – உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் மின்னல் தாக்கி மூன்று பேர் இறந்துள்ளனர்.

தமது புகையிலைத் தோட்டம் ஒன்றில் நான்கு வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது ஒருவர் மதிய உணவு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். ஏனையோரில் ஆண் ஒருவரும், இரண்டு பெண்களும் வேலைசெய்து கொண்டிருந்த போது திடீரென மழை பெய்த காரணத்தினால் அருகில் இருந்த தென்னைமரத்துக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டிலில் ஒதுங்கியுள்ளனர்.

இதன் போது இடி மின்னல் குறித்த தென்னை மரத்தின் மீது விழுந்ததில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். உணவு எடுக்கச் சென்றவர் திரும்பி வந்த போதே மூன்று பேரும் மின்னல் தாக்கி இறந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சகோதரர்களான திருநாவுக்கரசு கண்ணன் (48) , கந்தசாமி மைனாவதி (52) மற்றும்
ரவிக்குமார் சுதா (38)ஆகியோரே பலியாகியுள்னர்.