Breaking News

மிதக்கும் மின்சார நிலையம் – அமைச்சரவையில் வாக்குவாதம்

 

மிதக்கும் மின்னுற்பத்தி நிலையத்தைக் கொண்ட கப்பலில் இருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்கான அமைச்சரவை யோசனை இன்று அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்டது.

இதற்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க எதிர்ப்பை வெளியிட்டார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில்நிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அந்த கப்பல் குறித்த விபரங்கள் எதுவும் துறைமுக விவகார அமைச்சர் என்ற வகையில் தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும், தமது அனுமதி கிடைக்கப்பெறவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.

பின்னர் இந்த ஒப்பந்தம் குறித்த பத்திரத்தை துறைமுக விவகார அமைச்சின் அனுமதியுடன் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணினி வழங்கும் யோசனையை மீண்டும் இன்று கல்வியமைச்சர் முன்வைத்தபோதும் அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை.எனவே அந்த அமைச்சரவை பத்திரத்தையும் மீள்பரிசீலனை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மிகவும் கூலாக இருந்தாரென சொல்லப்பட்டது.