உலகம்

மாலியில் தாக்குதல் 25 பேர் பலி, 60 பேரை காணவில்லை

இரண்டு இராணுவ நிலையங்களை இலக்கு வைத்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  குறைந்தது 25 மாலி வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு, 60 பேரைக் காணவில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புர்கினா பாசோவின் எல்லைக்கு அருகிலுள்ள பவுல்கெஸி மற்றும் மொன்டோரோ நகரங்களில் உள்ள முகாம்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியை மீண்டும் கைப்பற்றும் நோக்கில், நடத்தப்பட்ட பதில் தாக்குதலில், தீவிரவாதிகள் 15 பேர் உயிரழந்ததாகவும், எனினும் ஏராளமான யுத்த உபகரணங்களை இழந்ததாகவும் அரசாங்கம் கூறpயுள்ளது.

இஸ்லாமிய போராளிகள் நாட்டின் வடக்கைக் கைப்பற்றிய நிலையில், 2012ஆம் ஆண்டு முதல் மாலி ஜிஹாதி வன்முறைகளையும், இனப் போராட்டங்களையும் சந்தித்து வருவதோடு, பிரான்ஸ் தனது இராணுவத் தலையீட்டைத் ஆரம்பித்தது.

இந்த ஆண்டு அரசாங்க துருப்புக்களுக்கு எதிராக மேற்கொண்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.

இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் என  அழைக்கப்படும், அன்சாருல் இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பு, பிரபலமான போதகர் இப்ராஹிம் மலாம் டிக்கோவால்  கடந்த 2016 ஆண்டு உருவாக்கப்பட்டது.

குறித்த போதகர், 2012இல் மாலியின் வடக்கில் இஸ்லாமிய போராளிகளுடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறப்படுகின்றது.