விளையாட்டு

மாலன் அதிரடி; தொடரை சமன் செய்தது இங்கிலாந்துநேபியரில் இடம்பெற்ற நான்காவது இருபதுக்கு-20 போட்டியில் 76 ஓட்டங்கங்களால் வெற்றிபெற்ற, இங்கிலாந்து அணிஇ நியுசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு-20 தொடரில் 2-2 என்ற  அடிப்படையில் சமநிலையயை அடைந்துள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில்  மூன்று விக்கெட்டுக்களை இழந்து 241  ஓட்டங்களைக் குவித்தது.

அணியின் துடுப்பாட்டத்தில், டேவிட் மாலன் அதிரடியாக ஆடி, 51 பந்துகளில், ஆறு, ஆறு ஓட்டங்கள் மற்றும் ஒன்பது, நான்கு ஓட்டங்கள் அடங்கலாக, 103 ஊட்டங்களைப் பெற்றார். இயன் மோர்கன் தனது பங்கிற்கு 41 பந்துகளில்,  ஏழு, ஆறு ஓட்டங்கள் மற்றும் ஏழு, நான்கு ஓட்டங்கள் அடங்கலாக, 91 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில்  நியுசிலாந்து சார்பாக, மிச்சல் சேன்ட்னர் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

242 என்ற மிகப்பெரிய ஓட்டத்தை, இலக்கை இலக்காகக் கொண்டு பதிலளித்து ஆடிய நியுசிலாந்து அணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை தழுவியது.

நியுசிலாந்து, அணி சார்பாக, டிம் சவுத்தி மாத்திரம் 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இங்கிலாந்து அணியின் மெட் பார்கின்சன் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் இறுதிப்போடடி; எதிர்வரும் 10ஆம் திகதி ஒக்லேன்ட்டில் இடம்பெறவுள்ளது.