உலகம்

மார்கரெட் அட்வுட், பெர்னார்டின் எவரிஸ்டோ: 2 எழுத்தாளர்களுக்கு புக்கர் பரிசு அறிவிப்பு

 

புகழ் பெற்ற எழுத்தாளர்களுக்கு வழங்கக்கூடிய புக்கர் பரிசு, இந்த ஆண்டு 2 எழுத்தாளர்களுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், கனடா எழுத்தாளர் மார்கரெட் அட்வுட், இங்கிலாந்து எழுத்தாளர் பெர்னார்டின் எவரிஸ்டோ ஆவர்.

புக்கர் பரிசு ஒருவருக்குத்தான் வழங்கப்படுவது வழக்கம். இரு எழுத்தாளர்களும் புக்கர் பரிசுக்கு தகுதியானவர்கள் என கருதி, மரபை புறந்தள்ளிவிட்டு பரிசு பிரித்து அளிக்கப்படுவதாக நடுவர்கள் கூறினர்.

இந்த பரிசுக்கான இறுதி பட்டியலில் இந்திய எழுத்தாளரான சல்மான் ருஷ்டியும் இடம் பெற்றிருந்தார். ஆனால் அவர் பரிசை தவற விட்டு விட்டார்.

புக்கர் பரிசு 50 ஆயிரம் பவுண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.