“மாமனிதன்” திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு
சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் “மாமனிதன்”.
இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.
விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி கூட்டணியில் உருவான மூன்றாவது படமாகும். இப்படத்தின் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவடைந்தும், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் வெளியிடப்படாமல் இருந்தது.
மேலும், இப்படத்தின் தலைப்பு பிரச்சனையும் தீர்ந்துவிட்டதால், விரைவில் இப்படத்தின் முதல் பார்வை மற்றும் பாடல்கள் வெளியாகவுள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி கடந்த மாதம் அறிவித்தார்.
இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை ஏப்ரல் 7ஆம் திகதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.