Breaking News

மானிப்பாயில் 100 கிலோ கஞ்சா மீட்பு !

 

-யாழ் நிருபர் –

யாழ்.மானிப்பாய் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இன்று அதிகாலை 100 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது . இவை காரைநகரில் இருந்து ரிப்பர் வாகனத்தில் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது

ரிப்பர் வாகன சாரதி வாகனத்தை கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருள் மற்றும் ரிப்பர் வாகனம் ஆகிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன .