Breaking News

“மாநாயக்க தேரர்மாரை சந்தித்து நேரடியாக பேசவுள்ளோம்” – சபையில் தெரிவித்தார் ரவூப் ஹக்கீம் !

 

“மக்களின் பாதுகாப்பு பற்றி தீவிரமாக சிந்தித்து நாங்கள் 9 பேரும் இராஜினாமா செய்தோம். தனித்தனியாக நாங்கள் இராஜினாமா செய்யவேண்டி இருந்தது. நாங்கள் கடந்த திங்கள் முதல் பதவிகளில் செயற்படாமல் இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

மாநாயக்க தேரர்கள் எம்மை பதவியேற்க வேண்டுமென கேட்டுள்ளனர்.நாங்கள் மாநாயக்கர்மாரை சந்தித்து இதுபற்றி பேசவுள்ளோம். நாங்கள் வரும் நாட்களில் அதுபற்றி பேசவுள்ளோம்.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் ஒருவர் ஆளுநர் இருவர் குறித்து விசாரியுங்கள். அந்த குற்றச்சாட்டுகளை வைத்து முழு சமூகத்தையும் நோக்க கூடாது”

– என்று சற்று முன் சபையில் தெரிவித்தார் ரவூப் ஹக்கீம் எம் பி