இலங்கை

மாநாயக்கர்மாரின் கருத்தை வரவேற்றார் பௌசி – உடனடியாக முடிவெடுக்க முடியாது என்கிறார் !

 

பதவிகளை இராஜினாமா செய்த அமைச்சர்மார் தமது பதவிகளை மீண்டும் பொறுப்பேற்கவேண்டுமென விடுத்துள்ள கோரிக்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ளார் மூத்த முஸ்லிம் அரசியல்வாதியான பௌசி எம் பி .

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்க வேண்டுமென்ற மாநாயக்க தேரர்களது கருத்து குறித்து கேட்டபோது இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது ,

மாநாயக்கர்களின் இந்த கருத்தை வரவேற்கிறேன்.ஆனால் இதுபற்றி உடனே முடிவெடுக்க முடியாது. நாங்கள் கூடி பேச வேண்டும்.சில பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை கண்டாக வேண்டும்.எந்த நாளும் இழுபறியில் இருக்க முடியாது.எனவே பிரச்சினைகளுக்கு தீர்வை காண முயற்சிக்க வேண்டும்.பேசி நாங்கள் ஒரு முடிவை எடுப்போம் ” – என்றார் பௌசி