Breaking News

மாத்தளையில் அரச அதிகாரிகள் மீது தாக்குதல் !

மாத்தளை யட்டத்தையில் கிரபைட் அகழ்வு குறித்து ஆராயச் சென்ற அரச அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சுமார் 40 பேர் கொண்ட குழு நடத்திய தாக்குதலால் காயமடைந்த அதிகாரிகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

அத்திபொல மலைப்பகுதியில் நடத்தப்படும் இந்த அகழ்வுகளால் சூழல் பாதிப்பு ஏற்படுவதாக முறையிடப்பட்டிருந்தது.

மாத்தளை பொலிஸார் இதுபற்றி விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.