இலங்கை

மாத்தறையில் பொசன் தானம் வழங்கி அசத்திய யாசகர் !

 

 

 

பொசன் தினத்தையொட்டி அப்புஹாமி என்ற யாசகர் ஒருவர் கேக் மற்றும் வில்வம்பூ தேநீர் பொசன் தானத்தை இன்று மாத்தறையில் வழங்கியுள்ளார்.

75 வயதுடைய இவர் சுமார் 40 ஆயிரம் ரூபாவை செலவிட்டு மாத்தறை மாநகரசபை முன்றலில் இந்த தானத்தை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது ,

“மத்துகமவை சேர்ந்த நான் எனது மனைவி இறந்த பின்னர் மாத்தறைக்கு வந்து யாசகத்தில் ஈடுபட்டு 13 வருடங்கள் ஆகின்றன. நாளொன்றுக்கு இரண்டாயிரம் கிடைக்கும்.சில நாட்களுக்கு இருநூறு – முன்னூறே கிடைக்கும். தெவிநுவர பஸ் தரிப்பிடத்தில் இரவு தூங்குவேன்.

இப்படி சேகரித்த பணத்தை ஒரு வர்த்தகரிடம் கொடுத்து சேர்த்தே இந்த தானத்தை நடத்துகிறேன்.கடந்த வருடம் ரோஸ்பான் தானம் கொடுத்தேன். அடுத்த வருடம் அன்னதானம் ஒன்றை வழங்க யோசித்துள்ளேன். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட நாய்கள் பூனைகளென 100 பிராணிகளுக்கு முடிந்த உணவை அளிப்பேன். எனக்கு பிச்சையளிக்கும் மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் இந்த தானத்தை வழங்கினேன்..” – என்றார் அப்புஹாமி.