Breaking News

மாணவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் – ஆசிரியர் கைது !

பதுளை, ஹாலிஎல பகுதி பாடசாலை ஒன்றின் சுமார் 11 மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இப்போது அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கணித பாடம் நடத்தும் மேற்படி 44 வயதுடை ஆசிரியர் பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆசிரியருக்கு எதிராக பதுளை பொலிஸ் நிலையத்தில் நேற்றுவரை சுமார் 11 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் ஒரு பெண் மாணவி உட்பட 26 மாணவர்கள் வரை மேற்படி ஆசிரியரினால் பாலியல் இம்சைக்கு ஆளானதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் கடந்தகால செயற்பாடுகள் குறித்தும் விசாரிக்கப்படுவதாக தகவல்