இலங்கை

மாணவர்கள் விடுதலையை வலியுறுத்தி யாழில் பதாகைகள் !

– யாழ்.செய்தியாளர் –
பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் பதாகைகள் தொங்க விடப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது .

“காக்கவென வந்த சட்டங்கள் அப்பாவிகளுக்குக்கு எதிரானது ஏன்?”,”மாணவர்களின் கல்வி சிறையிலா”,”விரைந்து சிறைக்கதவுகள் திறக்கட்டும் வீணே மூடிக் கிடக்கும் எங்கள் பல்கலைக்கழகத்தின் கதவுகளும் திறக்கட்டும்” போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகள் தொங்க விடப்பட்டிருந்தன.